2025 ஜூலை 24, வியாழக்கிழமை

குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் வெட்டிக் கொலை

Menaka Mookandi   / 2012 ஏப்ரல் 14 , பி.ப. 12:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் பொலிஸாரால் நீண்ட காலங்களாகத் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஒருவர் இனந்தெரியாதோரால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

தெஹியத்தர, ரதாவெல பிரதேசத்தைச் சேர்ந்த தேவாலேகம பண்டா (வயது 46) என்ற சந்தேகநபரே இவ்வாறு கூரிய ஆயுதங்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

மேற்படி சந்தேகநபர், 8 கொலைச் சம்பவங்கள் மற்றும் 18 குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்தவராவார்.

1989ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற கலவரங்களில் போது இடம்பெற்ற பல்வேறு குற்றச் செயல்களுடன் இவர் தொடர்புபட்டிருந்தார் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .