2025 ஜூலை 23, புதன்கிழமை

வயோதிபர் அடித்துக் கொலை; இருவர் கைது

Super User   / 2012 ஏப்ரல் 16 , பி.ப. 01:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஆர.கமலி)

டிக்கோயா, தரவளை பகுதியில் கடந்த சனிக்கிழமை இரவு 57 வயதான கோவிந்தன் என்பவர் அடித்துக் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக மரணமானவரின் மகள் மற்றும் மகளின் கணவர் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸ் நிலைய குற்றப்பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.

குடும்பத் தகராறு காரணமாகவே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது, தலையில் பலமாக தாக்கியதாலேயே குறித்த நபர் மரணமாகியுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.  இவரின் சடலம் மேலதிக பிரேத பரிசோதனைகளுக்காக நாவலப்பிட்டி ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இதேவேளை, கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களின் 10 வயதுக்கு குறைவான நான்கு பிள்ளைகளையும் பொறுப்பேற்பதற்க இதுவரையிலும் எவரும் முன்வராத காரணத்தினால் பொலிஸ் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவத்தை குறித்த சிறுவர்கள் நேரடியாக கண்டுள்ளதால் அவர்களிடமிருந்து வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .