2025 ஜூலை 23, புதன்கிழமை

சாவகச்சேரியில் ஆணின் சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2012 ஏப்ரல் 17 , மு.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

யாழ்ப்பாணம்,  சாவகச்சேரிப் பகுதியில் 3 நாட்களுக்கு முன்னர் காணாமல் போனதாகத் தெரிவிக்கப்படும் ஆணொருவரின் சடலம் உருக்குலைந்த நிலையில் வயல்வெளிக் கிணற்றிலிருந்து; நேற்று திங்கட்கிழமை இரவு மீட்கப்பட்டுள்ளது.

இப்பகுதியைச் இராசரத்தினம் ஆனந்தன் (வயது 51) என்பவர்; 3 நாட்களுக்கு முன்னர் காணாமல் போனதாகவும் இச்சடலம் அவருடையதாக இருக்கலாமெனவும் சாவகச்சேரி பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சாவகச்சேரி வடக்கு சேலையம்மன் ஆலயத்திற்குப் பின்புறமாகவுள்ள வயல்வெளிக் கிணற்றிலிருந்து இச்சடலம் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இக்கிணற்றிலிருந்து துர்நாற்றம் வீசியதையடுத்து, கிராம மக்கள் இக்கிணற்றை பார்வையிட்டபோது அதற்குள் சடலம் இருப்பதை கண்ட நிலையில் கிராம அலுவலகரூடாக பொலிஸாருக்கு தகவல் வழங்கினர். இதனைத் தொடர்ந்து தாம்; சடலத்தை மீட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
 
பிரேத பரிசோதனைக்காக சடலம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .