2025 ஜூலை 23, புதன்கிழமை

பெண்களின் வயிற்றுக்குள்ளிருந்து பெருந்தொகை கொகேய்ன் மீட்பு

Suganthini Ratnam   / 2012 ஏப்ரல் 17 , மு.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்ட தாய்லாந்தைச் சேர்ந்த இரு பெண்கள் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் அவர்களின் வயிற்றுக்குள்ளிருந்து  சுமார் 20 மில்லியன் ரூபா பெறுமதியான 162 கொகேய்ன் போதைப்பொருள் மாத்திரைகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கொகேய்ன் போதைப்பொருளை விழுங்கிய நிலையில் இலங்கையில் சந்தேக நபர்கள் கண்டுபிடிக்கப்பட்டமை இதுவே முதற்தடவையாகும்.

20 மற்றும் 33 வயதுடைய சந்தேக நபர்களே கைதுசெய்யப்பட்டுள்ளனர். 20 வயதான பெண் 88 கொகேய்ன் மாத்திரைகளையும் மற்றையவர் 74 கொகேய்ன் மாத்திரைகளையும் விழுங்கியுள்ளார்.

இவர்கள் கடந்த 10ஆம் திகதி டோஹாவிலிருந்து பாங்கொக் செல்லும் வழியில் இலங்கைக்கு வந்துள்ளனர். இவர்கள் அசாதாரணமாக காணப்பட்டதையடுத்து போதைப்பொருள் ஒழிப்பு பணியக அதிகாரிகள் கவனித்தனர். இவர்கள் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சோதிக்கப்பட்டபோது அவர்களின் வயிற்றுக்குள் கொகேய்ன் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. (தீபா அதிகாரி)

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .