2025 ஜூலை 23, புதன்கிழமை

துப்பாக்கியைக் காண்பித்து வர்த்தகரை அச்சுறுத்திய இரு இளைஞர்கள் கைது

Menaka Mookandi   / 2012 ஏப்ரல் 17 , பி.ப. 12:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

யாழ். கந்தர்மடம் வீதியில், துப்பாக்கியைக் காண்பித்து கொழும்பைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவருக்கு அச்சுறுத்தல் விடுத்த இரு இளைஞர்களை யாழ். விசேட குற்றத்தடுப்பு பொலிஸார் இன்று செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளனர்.

மேற்படி அச்சுறுத்தல் சம்பவம் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 23ஆம் திகதி இடம்பெற்ற நிலையில், சந்தேக நபர்களான இரு இளைஞர்களும் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட இருவரும் சகோதரர்கள் என விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. இவர்கள் இன்று யாழ்.நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இவர்களை விசாரித்த யாழ்.நீதிமன்ற நீதிவான் மா.கணேசராச அவர்களை, எதிர்வரும் 30ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .