2025 ஜூலை 23, புதன்கிழமை

யாழ். பல்கலை மாணவியின் சடலம் வவுனியா கிணற்றிலிருந்து மீட்பு

Menaka Mookandi   / 2012 ஏப்ரல் 17 , பி.ப. 01:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


(நவரத்தினம்,
ரொமேஸ் மதுசங்க)

யாழ். பல்கலைக்கழகத்தின் இரண்டாம் வருட கலைப்பீட மாணவியொருவரின் சடலமொன்றை, வவுனியா, உக்கிலாங்குளம் பிரதேசத்திலுள்ள கிணறொன்றிலிருந்து பொலிஸார் மீட்டுள்ளனர். மரியா நிந்தால் பவுஸியா (25 வயது) என்ற மாணவியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.

யாழ்ப்பாணத்திலிருந்து நேற்று திங்கட்கிழமை, வவுனியாவிலுள்ள தனது மாமியின் வீட்டுக்கு வந்துள்ள மேற்படி மாணவி, நேற்று பிற்பகல் 3.30 மணியிலிருந்து காணாமல் போயுள்ளார். இவரைத் தேடும் பணிகளில் உறவினர்கள் ஈடபட்டிருந்த நிலையில், இன்று காலை இது தொடர்பாக பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இந்நிலையிலேயே குறித்த மாணவியின் சடலம், அவரது மாமியின் வீட்டு வளாகத்தில் அமைந்துள்ள கிணற்றில் மிதந்துகொண்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

மேற்படி மாணவியின் பெற்றோர், வடக்கில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், செட்டிக்குளம் நலன்புரி முகாமில் தங்கியிருந்து தனது கல்வி நடவடிக்கைகளை தொடர்ந்துள்ள அவர், யாழ். பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகி உயர்க்கல்வியினைத் தொடர்ந்துள்ளார்.

இடைக்கிடையில், உக்கிலாங்குளம் பிரதேசத்தில் அமைந்துள்ள அவரது மாமியின் வீட்டுக்கு வந்து செல்லும் நிலையிலேயே இந்த மரண சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

குறித்த மாணவியின் மரணம், தற்கொலையா? கோலையா? என்பது தொடர்பில் வவுனியா பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .