2025 ஜூலை 23, புதன்கிழமை

யாழில்உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு

Kogilavani   / 2012 ஏப்ரல் 18 , மு.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.கே.பிரசாத், கவிசுகி)

யாழ். வடமராட்சிப் பகுதியில் இன்று காலை உருக்குலைந்த நிலையில் ஆணொருவரின் சடலத்தை மீட்டுள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த சித்திரைப் புத்தாண்டு அன்று காணாமல்போன சிவலிங்கம் சிவகுமார் என்ற 18 வயது ஆணின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

யாழ். கெருடாவில் தொண்டமனாற்றைச் சேர்ந்த மேற்படி இளைஞன் சித்திரை புத்தாண்டு தினத்தன்று மாலை 6 மணிக்கு தனது உறவினர் ஒருவருடைய வீட்டிற்கு செல்வதாக கூறிச் சென்றுள்ளார். எனினும் குறித்த இளைஞன் வீடு திரும்பாததையடுத்து அவர் காணாமல் போயுள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் பெற்றோரால் முறைப்பாடு செய்யப்பட்டது.

இந்நிலையில், குறித்த இளைஞன் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.  இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .