2025 ஜூலை 23, புதன்கிழமை

தடைசெய்யப்பட்ட சிகரெட்டுக்களை விற்ற குற்றச்சாட்டில் இருவர் கைது

Kogilavani   / 2012 ஏப்ரல் 18 , மு.ப. 08:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.மாறன்)
அக்கரைப்பற்றில், தடைசெய்யப்பட்ட வெளிநாட்டு சிகரெட்களை விற்பனை செய்த கடை உரிமையாளர்கள் இருவரை  அம்பாறை போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளதுடன் சிகெரட்டுக்களும் மீட்டுள்ளதாக  அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

விசேட பொலிஸ் பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவதினமான நேற்று செவ்வாய்க்கிழமை அக்கரைப்பற்று 5ஆம் பிரிவு பிரதேசத்தில் உள்ள இரு கடைகளை போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் சுற்றிவளைத்து சோதனையிட்டுள்ளனர்.

இதன்போது தடைசெய்யப்படட் 10 சிகரெட்டுகளை கடைகளில் வைத்து விற்பனையில் ஈடுபட்ட இரு கடை உரிமையாளர்களை கைது செய்து அக்கரைப்பற்று பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

கைதுசெய்த இருவரையும் இன்று புதன்கிழமை அக்கரைப்பற்று மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளையும் மேற்கொண்டு வருவதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .