2025 ஜூலை 23, புதன்கிழமை

வாள்வெட்டில் இளைஞர் படுகாயம்

Suganthini Ratnam   / 2012 ஏப்ரல் 18 , மு.ப. 09:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

யாழ்ப்பாணம், அரியாலை காந்தி சனசமூக நிலையப் பகுதியில் இளைஞர் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறில் வாள்வெட்டுக் இலக்கான இளைஞரொருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் இன்று புதன்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அரியாலையைச் சேர்ந்த எஸ்.கமல்ராஜ் (வயது 25) என்ற இளைஞரே வாள்வெட்டுக்கு இலக்காகியுள்ளார்.

காந்தி சனசமூக நிலையத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியின்போது இளைஞர் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறில் வாள்வெட்டு இடம்பெற்றதாக விசாரணையின் மூலம் தெரியவந்ததாக யாழ். பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் இரு இளைஞர்களைக் கைதுசெய்துள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .