2025 ஜூலை 23, புதன்கிழமை

திருகோணமலையில் ஆணொருவர் வெட்டிக்கொலை

Suganthini Ratnam   / 2012 ஏப்ரல் 19 , மு.ப. 07:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, ஐயனார்கேணிப் பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து நேற்று புதன்கிழமை இரவு வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

திருகோணமலை, பலாலுது பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரதாசன் கேதீஸ்வரன் (வயது 28) என்பவரே இவ்வாறு வெட்டிக் கொலை செய்யப்பட்டதாகவும் பிரித்தானியாவை வசிப்பிடமாகக் கொண்ட இவர் கடந்த வருடம் தாயகம் திரும்பியிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவருடன் தாயகம் திரும்பியிருந்த இவரின் மனைவி அண்மையில் பிரித்தானியாவுக்குச் சென்றுள்ளார். இவர் பிரித்தானியாவுக்கு கூடிய விரைவில் செல்லத் தயாராகிக்கொண்டிருந்ததாகவும்  நேற்றிரவு அவர் வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தபோது  வெட்டிக் கொலை செய்யப்பட்டதாகவும் விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். (கஜன்,அமதோரு அமரஜீவ, எம்.பரீட்)

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .