2025 ஜூலை 23, புதன்கிழமை

வவுனியாவில் ஜீப் தீக்கிரை

Suganthini Ratnam   / 2012 ஏப்ரல் 22 , மு.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


                                                                                               (பிரியந்த ஹேவகே,நவரத்தினம்)

வவுனியா உக்கிளாம் குளம் பகுதியில் அரசசார்பற்ற நிறுவன அதிகாரியொருவரின் ஜீப் வாகனம் நேற்றிரவு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

கண்ணிவெடி அகற்றலில் ஈடுபடும்  எவ்.எஸ்.டி. எனும் அரசசார்பற்ற நிறுவனத்தின் அதிகாரியான பி.ரொஷான் கிருஷ்டி என்பவரின் வாகனமே இவ்வாறு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

தனது வீட்டிற்கு  மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அவரை வெளியில் வருமாறு கூறியதாகவும் தான் வீட்டிலிருந்து வெளியே செல்லாத நிலையில், ஜீப் வாகனத்தை மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் தீக்கிரையாக்கியதாகவும் வவுனியா பொலிஸ் நிலையத்தில் அவர் முறைப்பாடு செய்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .