2025 ஜூலை 23, புதன்கிழமை

இனந்தெரியாத ஆயுததாரிகளின் வாள்வெட்டில் இளைஞன் பலி

Menaka Mookandi   / 2012 ஏப்ரல் 24 , பி.ப. 01:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.கே.பிரசாத்)

யாழ். வடமராட்சி, வதிரி பகுதியில் இனந்தெரியாத ஆயுததாரிகளின் வாள் வெட்டுக்கு இலக்கான இளைஞர் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியான சம்பவமொன்று இன்று பிற்பகல் 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே மேற்படி இளைஞன் மீது வாள் வெட்டினை மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் தொண்டமனாறு பிரதேசத்தைச் சேர்ந்த சிவஞானம் சிவரூபன் என்ற (வயது 28) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

குறித்த இளைஞன், தொண்டமனாறு பிரதேசத்தில் இருந்து மந்திகை வைத்தியசாலையில் பணியாற்றும் மாமனாருக்கு உணவு கொடுத்துவிட்டு வீடு திரும்பும் போதே இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .