2025 ஜூலை 23, புதன்கிழமை

பேசாலையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது.

Suganthini Ratnam   / 2012 ஏப்ரல் 25 , மு.ப. 03:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.ஜெனி)

மன்னார்,  பேசாலைப் பகுதியில் ஒருதொகுதி போதைப்பொருளை வைத்திருந்ததாகத் தெரிவிக்கப்படும் ஒருவரை  நேற்று செவ்வாய்க்கிழமை கைதுசெய்ததுடன், போதைப்பொருளை கைப்பற்றியுள்ளதாகவும் மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துசார தலுவத்த தெரிவித்தார்.

தமக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து மன்னார் பொலிஸாரும் கொழும்பிலிருந்து வந்த போதைப்பொருள்  தடுப்புப்பிரிவு பொலிஸாரும் வீடொன்றில்  மறைத்துவைக்கப்பட்டிருந்த நிலையில்  10 கிலோகிராம் கஞ்சா, ஒரு கிலோகிராம் ஹெரோயின் ஆகியவற்றை கைப்பற்றியதாகவும் அவர் கூறினார்.

கைதுசெய்யப்பட்ட நபரிடம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .