2025 ஜூலை 23, புதன்கிழமை

கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஒருவர் கைது

Suganthini Ratnam   / 2012 ஏப்ரல் 26 , மு.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கே.என்.முனாஷா)

சட்டவிரோதமாக கசிப்பு தயாரிப்பில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படும்  ஒருவரை 500,000 ரூபா பெறுமதியான பொருட்களுடன் கைதுசெய்துள்ளதாக நீர்கொழும்பு பொலிஸ் நிலையப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று தெரிவித்தனர்.

12 ஆயிரத்து 60 டிராம்ஸ் கோடா, 6 பரல்கள்,  30 போத்தல் கசிப்பு,  எரிவாயு சிலின்டர்,  எரிவாயு உள்ளிட்டவை இதன்போது கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர்.

நீர்கொழும்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் உத்தரவுக்கமைய பொலிஸ் பரிசோதகர் அனஸ்லி, உபபொலிஸ் பரிசோதகர் பண்டார இஹேரத், பொலிஸ் கான்ஸ்டபிள்களான ஜயதிலக்க, ஹேரத் ஆகியோர் சுற்றிவளைப்பை மேற்கொண்டு பொருட்களை கைப்பற்றியதுடன், சந்தேக நபரையும் கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர். 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .