2025 ஜூலை 23, புதன்கிழமை

மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீவைக்க முயன்ற கணவன் கைது

Menaka Mookandi   / 2012 ஏப்ரல் 27 , பி.ப. 01:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

தனது மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீவைக்க முயற்சித்த கணவனை பொலிஸார் கைது செய்த சம்பவமொன்று இன்று வெள்ளிக்கிழமை யாழ். நாவாந்துறை, பொம்மைவெளிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

மதுபோதையில் தனது மனைவியின் தலையில் மண்ணெண்ணெயை ஊற்றி தீவைக்க முயற்சி செய்யும் போது குறித்த பெண் கணவனிடமிருந்து தப்பியோடி யாழ்.பொலிஸ் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக குறித்த பெண்ணிடம் முறைப்பாட்டைப் பதிவு செய்த பொலிஸார் அவரது கணவனைத் தேடி வலை விரித்தனர். இதன்போது, மதுக்கடை ஒன்றில் மது அருந்திக் கொண்டிருக்கும் போது சந்தேகநபராக கணவர், பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .