2025 நவம்பர் 17, திங்கட்கிழமை

அட்டாளைச்சேனை பிரதேசசபை தவிசாளரின் சகோதரர் மீது ஆயுததாரிகள் துப்பாக்கிச்சூடு

Menaka Mookandi   / 2012 ஏப்ரல் 30 , பி.ப. 02:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஹனீக் அஹமட்)

அட்டாளைச்சேனை பிரதேசத்தில் இன்று மாலை 6 மணியளவில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளரின் இளைய சகோதரரான ஏ.எல்.எம்.நஸீம் என்பவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அட்டாளைச்சேனை, அல்முனீறா வித்தியாலய வீதி வழியாக காரில் பயணித்துக்கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த துப்பாக்கிதாரியொருவர் மேற்படி நபர் மீது துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்தின் போது, துப்பாக்கிச் சூட்டுக்குள்ளான நபரின் வாகனமானது அருகிலிருந்த வீட்டுச் சுவர், வீதியால் சென்று கொண்டிருந்த வாகனங்கள் மற்றும் மின் கம்பம் ஆகியவற்றினை மோதிச் சேதப்படுத்திய நிலையில் புரண்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X