2025 நவம்பர் 17, திங்கட்கிழமை

போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் பிலிப்பைன் பிரஜை கைது

Suganthini Ratnam   / 2012 மே 02 , மு.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

போதைப்பொருளை  கொண்டுவந்ததாகத் தெரிவிக்கப்படும் பிலிப்பைன் பிரஜையொருவர் பண்டார நாயக்க விமான நிலையத்தில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இச்சந்தேக நபர் போதைப்பொருள் கொண்டுவருவதாக கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இச்சந்தேக நபர் கொக்ஹெய்ன் மாத்திரைகளை விழுங்கியமை தொடர்பாக விசாரணையின்போது தெரியவந்ததைத் தொடர்ந்து நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.  இவரது உடம்பினுள் மறைத்துவைக்கப்பட்ட 30 கொக்ஹெய்ன் மாத்திரைகளை பொலிஸார் கண்டெடுத்துள்ளனர்.

இது தொடர்பில் பொலிஸ் போதைப்பொருள் பிரிவினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X