2025 நவம்பர் 17, திங்கட்கிழமை

புதையல் தோண்டிய நபர்கள் கைது

Suganthini Ratnam   / 2012 மே 02 , மு.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

விலாச்சிய ரனோரவ துனுமடலவ பகுதியிலுள்ள குளத்தின்  அணைக்கட்டொன்றில் பக்கோ இயந்திரத்தின் உதவியுடன் புதையல் தோண்டிய குழுவினர், புதையல் தோண்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்த பிரதேசவாசிகளுடன் இன்று மோதலில் ஈடுபட்டனர்.

விசேட அதிரடிப்படையைச் சேர்ந்தவர்களே இப்புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

அவர்கள் பிரதேசவாசிகளை கடுமையாக தாக்கியதுடன், அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளவும் முயற்சித்துள்ளனர். இச்சம்பவத்தில் பெண்கள் உட்பட பல பிரதேசவாசிகள் காயமடைந்துள்ளனர்.

இதேவேளை, புதையல் தோண்டிய சிலர் அவ்விடத்திலிருந்து பக்கோ இயந்திரத்தையும் எடுத்துக்கொண்டு இத்திக்குளம் பக்கமாக தப்பியோடியுள்ளனர்.

பொதுமக்களினால் பிடிக்கப்பட்ட  சிலர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். குளக்கட்டில் சந்தேக நபர்கள் தோண்டிய 10 அடி ஆழமான கிடங்கின் அருகிலிருந்து பூஜைத் தட்டொன்றையும் கருவிகளையும் உபகரணங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.  (அதுல பண்டார)

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X