2025 நவம்பர் 17, திங்கட்கிழமை

இரு சிறுமிகளை வல்லுறவுக்கு உப்படுத்தியவர் கைது

Menaka Mookandi   / 2012 மே 04 , பி.ப. 02:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

மாங்குளம் பிரதேசத்தில், சகோதரிகளான இரு சிறுமிகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதான குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று மாங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

4 வயது மற்றும் 6 வயது நிரம்பிய மேற்படி இரு சகோதரிகளையும் பார்த்துக்கொள்ளுமாறு அயல் வீட்டுக்காரர் ஒருவரிடம் அவர்களது தாயார் ஒப்படைத்துவிட்டு கடைக்குச் சென்றிருந்த வேளை, அவ்விருவரும் மேற்படி அயல்வீட்டுக்காரரால் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்று பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான முறைப்பாட்டை அடுத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் இச்சம்பவத்துடன் தொடர்புடைய இரு சிறுமிகளும் இன்றைய தினம் யாழ்.போதனா வைத்தியசாலையில் பெண்கள் நோயியல் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சகோதரிகளான இவ்விரு சிறுமிகளும் மருத்துவப் பரிசோதனைக்கு உப்படுத்தப்பட்ட பின்பு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக மாங்குளம் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X