2025 நவம்பர் 17, திங்கட்கிழமை

பேராதனை இலங்கை வங்கி கிளையில் கொள்ளை

Menaka Mookandi   / 2012 மே 07 , மு.ப. 07:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சீ.எம்.ரிஃபாத்)

கண்டி, பேராதனையில் அமைந்துள்ள இலங்கை வங்கிக் கிளை இனந்தெரியாதோரால் உடைக்கப்பட்டு, அங்கு வைக்கப்பட்டிருந்த புற்றுநோய்க்கான நன்கொடை சேகரிப்பு உண்டியல் பெட்டி திருடப்பட்டிருப்பதாக பேராதனை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த திருட்டுச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம்பெற்றிருப்பதாக பொலிஸ் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

வங்கியின் பின்புற கதவை உடைத்து இனந்தெரியாதோர் உட்புகுந்து திருட்டை மேற்கொண்டிருப்பதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைதுசெய்யப்படவில்லை என்பதுடன், பேராதனை பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X