2025 நவம்பர் 17, திங்கட்கிழமை

போத்தலினால் தாக்கப்பட்டு ஒருவர் பலி

Suganthini Ratnam   / 2012 மே 07 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரத்மலானையில் தானசாலையொன்றுக்கு அருகாமையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற சண்டையின்போது, போத்தலொன்றினால் தாக்கப்பட்டு ஒருவர் கொலைசெய்யப்பட்டுள்ளார்.

மாத்தறையைச் சேர்ந்தவரும் வெள்ளவத்தையை வசிப்பிடமாகக் கொண்டவருமான தர்ஷன கீர்த்திகுமார (வயது 40) என்பவரே இச்சம்பவத்தில் பலியானார்.  போத்தலினால் தாக்கப்பட்ட  இந்நபர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

பாதிக்கப்பட்ட நபரின் மோட்டார் சைக்கிளிலிருந்து ஜக்கெட் திருட்டுப்போனமை தொடர்பில் வாக்குவாதம் இடம்பெற்றதைத் தொடர்ந்து இத்தாக்குதல்; இடம்பெற்றது. ஜக்கெட் திருடியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவரும்   இத்தாக்குதலுக்கு பொறுப்பானவருமான  சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கல்கிஸைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டுவரும் கல்கிஸைப் பொலிஸார், சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளனர்.(எம்.எஸ்.பெரேரா)

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X