2025 நவம்பர் 17, திங்கட்கிழமை

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட தேக்கு மரக்குற்றிகள், வாகனங்கள் பொலிஸாரிடம் சிக்கின.

Super User   / 2012 மே 07 , பி.ப. 03:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                            

( ஏ.எச்.ஏ. ஹுஸைன்)


சட்டவிரோதமாக  கொண்டுவரப்பட்டு ஏறாவூர் வாவிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒன்றரை இலட்ச ரூபா பெறுமதியான 26 தேக்குமரக் மரக்குற்றிகள், அவற்றை ஏற்றிவரப்பயன்படுத்தப்பட்ட 2 உழவு இயந்திரங்கள், 2 கெப் வாகனங்கள், 2 மாட்டு வண்டிகள் என்பனவற்றை இன்று திங்கட்கிழமை பொலிஸார் கைப்பற்றியதாக ஏறாவூர் பொலிஸ் நிலைய பிரதம பொலிஸ் பரிசோதகர் ஜீ.பி.எச்.எச். சனத்குமார பண்டார தெரிவித்தார்.

இந்த மரக்கடத்தலை பிரதம பொலிஸ் பரிசோதகர் ஜீ.பி.எச்.எச். சனத்குமார பண்டார  தலைமையிலான ஏழு பேரடங்கிய பொலிஸ் குழுவினர் முறியடித்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட தேக்குமரக்குற்றிகளும் அவற்றை ஏற்றிவரப் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும்; வாகனங்களும் ஏறாவூர் பொலிஸ் நிலையத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X