2025 நவம்பர் 17, திங்கட்கிழமை

பாலியல் வல்லுறவுக் குற்றச்சாட்டில் அதிபர் கைது

Suganthini Ratnam   / 2012 மே 08 , மு.ப. 09:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

(மொஹொமட் ஆஸிக், சீ.எம். ரிஃபாத் )

13 வயதுடைய மாணவனொருவனை பாலியல் வல்லுறவிற்குட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் பாடசாலை அதிபரொருவர் நேற்று திங்கட்கிழமை கல்னாவ பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்த துஷ்பிரயோக சம்பவம் சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்றுள்ளதாக சிறுவனின் பெற்றோர் கல்நேவ பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்துள்ளனர்.
 
இதனையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சம்பந்தப்பட்ட பாடசாலை அதிபரை கைதுசெய்துள்ளனர்.
 
தரம் 8 இல் கல்வி கற்கும் மாணவன் ஒருவரே அதிபரால் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
 

கெக்கிராவை அவுகன பிரதேச பாடசாலையை அதிபரொருவரே கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X