2025 நவம்பர் 17, திங்கட்கிழமை

மகள்களை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய குற்றச்சாட்டில் தந்தையர்கள் கைது

Super User   / 2012 மே 09 , மு.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரி.லோஹித்)

மட்டக்களப்பு, கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பொண்டுகல்சேனை மற்றும் திகிலிவட்டை ஆகிய பகுதிகளில் இரண்டு சிறுமிகள் தந்தையினரால் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.

தற்போது மேற்படி தந்தையர் இருவரும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

பொண்டுகல்சேனையில் 14 வயது சிறுமி தந்தையினால் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டுள்ளார். அத்துடன், திகிலிவட்டை பகுதியில் தனது தாயின் இரண்டாவது கணவனால் 14 வயது சிறுமி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

குறித்த சிறுமிகளில் ஒருவர் கர்ப நிலையில் உள்ளதுடன் மற்றுமொருவர் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இப்பிரதேசங்களில் போதிய விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாத காரணத்தினால் இவ்வாறான சம்பவங்கள் அதிகரித்து வருவதாக சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X