2025 நவம்பர் 17, திங்கட்கிழமை

பொத்துவிலில் மான் இறைச்சியுடன் ஒருவர் கைது

Kogilavani   / 2012 மே 10 , மு.ப. 07:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.மாறன்)
பொத்துவில் லகுகலை உலலங்கை காட்டுப்பகுதியில் மான் இறைச்சி, மான் தோல் மற்றும் துப்பாக்கியுடன் காணப்பட்ட நபர் ஒருவரை விசேட அதிரடிப்படையினர் நேற்று புதன்கிழமை கைது செய்துள்ளதாக பொத்துவில் பொலிஸார் தெரிவித்தனர்.

திசமாறகம கோணகலை பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது, அவரிடமிருந்து மான் இறைச்சி, மான் தோல் மற்றும் உள்ளூர் துப்பாக்கி என்பவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த காட்டுப் பகுதியில் விசேட அதிரடிப்படையினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுப்பட்டிருந்தபோதே மேற்படி நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் இன்று வியாழக்கிழமை பொத்துவில் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தபடவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளையும் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X