2025 ஜூலை 23, புதன்கிழமை

டெனிம் காற்சட்டை திருடிய இளைஞருக்கு விளக்கமறியல்

Super User   / 2012 மே 11 , மு.ப. 10:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

(லக்மால் சூரியகொட)

புறக்கோட்டை உலக சந்தை கட்டிடத் தொகுதியிலுள்ள கடையொன்றிலிருந்து டெனிம் காற்சட்டையொன்றை திருடியதாக குற்றம் சுமத்தப்பட்ட இளைஞர் ஒருவர் மே 25 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

2000 ரூபா பெறுமதியான காற்சட்டையை மேற்படி இளைஞர் திருடிக்கொண்டு ஓடும்போது  கடை உரிமையாளரால் பிடிக்கப்பட்டதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பின்னர் பொலிஸாரிடம்  அவ்விளைஞர் ஒப்படைக்கப்பட்டார். அந்த இளைஞருக்கு எதிராக மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றிலும் இதேபோன்ற வழக்கு இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இக்குற்றச்சாட்டுகளை மேற்படி இளைஞர் ஒப்புக்கொண்டார். அதையடுத்து அவ்விளைஞரை மே 25 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் கனிஷ்க விஜேரட்ன உத்தரவிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .