2025 ஜூலை 23, புதன்கிழமை

கோயில் பூசாரி மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல்

Menaka Mookandi   / 2012 மே 14 , மு.ப. 08:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

யாழ். நவாலி வடக்குப் பகுதியில் இனம் தெரியாத நபர்களினால் தாக்கப்பட்ட கோயில் பூசாரி ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

உரும்பிராய் அம்மன் கோயில் பூசாரி ஸ்ரீகணேஸ் சர்மானந் (வயது 38) என்பவரே இனந்தெரியாத நபர்களினால் தாக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கோயில் பகுதியில் தண்ணீர் எடுத்துக்கொண்டு இருக்கும் போது மோட்டார் சைக்கிளில் வந்த இனம் தெரியாத நபர்கள், தலையில் தாக்கியதாக முறையிடப்பட்டதை அடுத்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .