2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

கசிப்பு தயாரிப்பில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது

Super User   / 2012 மே 25 , பி.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கே. என்.முனாஷா )

கசிப்பு தயாரிப்பில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர், ஒரு இலட்சம் ரூபா சரீரப்பிணையில் செல்வதற்கு நீர்கொழும்பு மேலதிக நீதவான் நேற்று வெள்ளிக்கிழமை அனுமதித்தார்.

சீதுவை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிளான கட்டானை களுவரிப்புவ பிரதேசத்தை சேர்ந்த சந்தேக நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார்.

சந்தேக நபரால் கட்டானை களுவரிப்புவ பிரதேசத்தில் முறையில் நடத்தப்பட்டு வந்ததாக கூறப்படுமு; கசிப்பு தயாரிப்பு நிலையத்தை சுற்றநிவளைத்த நீர்;கொழும்பு பொலிஸார், பெருமளவான கசிப்பு, கோடா மற்றும் கசிப்பு தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்களை கைப்பற்றியுள்ளதோடு சந்தேக நபரையும் கைது செய்துள்ளனர்.

சந்தேக நீதிமன்றில் தான் குற்றமற்றவர் என நீதிமன்றில் தெரித்தார். இந்நிலையில் சந்தேக நபரை ஒரு இலட்சம் ரூபா சரீரப்பிணையில் செல்வதற்கு நீதவான் அனுமதித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .