2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

தங்க ஆபரணங்களைத் திருடிய இரு பெண்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறை

Super User   / 2012 மே 25 , பி.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                   (கவிசுகி)

கொழும்புத்துறை மணியம் தோட்டப்பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வீட்டு வேலைக்கு அமர்த்தப்பட்ட இரு பெண்கள் தங்க ஆபரணங்களைத் திருடிய குற்றத்திற்காக ஜந்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒருவருட சிறைத்தண்டனையை இன்று வெள்ளிக்கிழமை யாழ்.நீதிவான் நீதிமன்றம் வழங்கியுள்ளது

வீட்டில் வேலைக்கு அமர்ந்தப்பட்ட இவ்விரு பெண்களும் 3,62,500 ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்களை திருடியதாக குற்றம் சுமத்தப்பட்டது.

குறித்த இரு பெண்களும் சந்தேகத்தின் பேரில் யாழ். பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு விசாரணையின் போது தங்க ஆபரணங்களை மலசலக்கூட குழியில் மறைத்து வைத்ததை ஒப்புக் கொண்டனர்.

மீட்கப்பட்ட தங்க ஆபரணங்களுடன் யாழ்.நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது குறித்த இரு பெண்களும் குற்றத்தை ஒப்புக் கொண்டனர். இதையடுத்து இவ்விருவருக்கும் ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒருவருட சிறைத்தண்டனையை யாழ். நீதிமன்ற நீதிவான் மா.கணேசாரா வழங்கியுள்ளார்

தங்க ஆபரணங்களை உரிமையாளர்களிடம் ஒப்படைக்குமாறு பொலிஸாருக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .