2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

லண்டனுக்கு அனுப்புவதாகக் கூறி பணமோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஒருவர் கைது

Super User   / 2012 மே 25 , பி.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                    (கவிசுகி)

லண்டனுக்கு அனுப்புவதாகக் கூறி பணமோசடியில் ஈடுபட்ட சந்தேக நபரை யாழ். விசேட குற்றத் தடுப்பு பிரிவினர் இன்று வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளனர்.

மட்டுவில் சாவகச்சேரியைச் சேர்ந்த ஒருவரை லண்டனுக்கு அனுப்புவதாக கூறி, 5,20,000 ரூபாவை பெற்று ஏமாற்றிய ஏமாற்றிய குற்றச்சாட்டுக்குள்ளான சந்தேக  நபரை  விசேட குற்றத் தடுப்பு பிரிவினர்  இன்றைய தினம் கைது செய்து யாழ்.நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தினர்

குறித்த நபர் போலி வெளிநாட்டு முகவர் நிலையத்தை யாழ். கந்தர் மடத்தில் நடத்திவந்துள்ளதாகவும் பல இளைஞர்களை வெளிநாட்டு ஆசை காட்டி அவர்களிடமிருந்து பணத்தை பெற்றுக் கொண்டுள்ளார் எனவும் குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளது.

சந்தேக நபரை விசாரித்த யாழ். நீதிமன்ற நீதிவான் மா.கணேசராசா 2 இலட்சம் பெறுமதியான இரண்டு ஆள்பிணையில் செல்ல அனுமதித்ததுடன்  வழக்கு விசாரணையை எதிர்வரும் ஜுன்  29 ஆம் திகதிக்கு  ஒத்திவைத்துள்ளார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .