2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

அளுத்கமையில் நகை கடை கொள்ளையில் ஈடுபட்டதாக கூறப்படும் சந்தேக நபர் கைது

Kogilavani   / 2012 மே 27 , மு.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ். எம். மும்தாஜ், ஜூட் சமந்த)
அளுத்கமை பிரதேசத்திலுள்ள நகைக் கடையொன்றில் கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற சுமார் ஐந்தரை கோடி ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் மற்றும் இரத்தினக்கற்கள் கொள்ளையுடன் தொடர்புடைய சந்தேக நபர்களில்; ஒருவரை நேற்று மாலை சிலாபம் முன்னேஸ்வரம் பிரதேசத்தில் வைத்து கைது செய்ததாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவரிடம் இருந்து குறித்த கொள்ளைச் சம்பவத்திற்குப் பயன்படுத்தியதாக கூறப்படும் வான் ஒன்றுடன் மேலும் இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் கைப்பற்றியுள்ளதுடன் கொள்ளையிடப்பட்ட 50 இலட்சம் பெறுமதியான தங்க நகைகளுடன் இரத்தினக்கற்களையும் கைப்பற்றியதாக தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையிலே மேற்படி சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைக்காக அளுத்கமை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .