2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

முச்சக்கரவண்டியில் சென்றவர் மீது இனந்தெரியாதோர் தாக்குதல்

Menaka Mookandi   / 2012 மே 28 , மு.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

ஹட்டனிலிருந்து ஒஸ்போனுக்கு முச்சக்கரவண்டியில் சென்ற நபர் ஒருவரை  இனந்தெரியாதோர் சிலர் கடுமையாகத் தாக்கி வீதியோரத்தில் தள்ளிவிட்டுச்சென்ற சம்பவமொன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.

ஹட்டன் நகரில் பொருட்களைக் கொள்வனவு செய்த ஒஸ்போன் தோட்டத்தைச் சேர்ந்த  துரைசாமி நல்லுசாமி என்ற நபர், நேற்றிரவு 7 மணியளவில் முச்சக்கரவண்டியொன்றை வாடகைக்கு அமர்த்திக் கொண்டு ஒஸ்போனுக்குச் சென்றுள்ளார்.

இவ்வாறு சென்றவரை டிக்கோயா சமர்வில் இரட்டை வங்கிக்கு அருகில் கடுமையாக தாக்கி அவரிடமிருந்த பணம் மற்றும் பொருட்களையும் பறித்துக்கொண்டு சென்றுள்ளனர் இனந்தெரியாதோர் சிலர். சம்பவத்தில் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி வீதியோரத்தில் கிடந்த நபரை பிரதேச மக்கள் இன்று காலை மீட்டுள்ளனர்.

குறித்த நபர் தற்போது டிக்கோயா கிளங்கன் மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார். இந்தச்சம்பவம் தொடர்பாக ஹட்டன் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .