2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

கைபேசியில் ஆபாச படங்கள் வைத்திருந்த இளைஞன் கைது

Menaka Mookandi   / 2012 மே 28 , பி.ப. 01:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

யாழ். பஸ் நிலையத்தில் கைபேசியில் 20 ஆபாச படங்களை வைத்திருந்து அவற்றை ஏனைய நபர்களுக்கும் காண்பித்து வந்த 21 வயது இளைஞன் ஒருவரை யாழ். பொலிஸார் இன்று திங்கட்கிழமை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இளைஞர் இன்றைய தினம் யாழ்.நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு வழக்கு வசாரணை நடைபெற்றது. இதனையடுத்து, 20 ஆயிரம் ரூபா பெறுமதியான இரண்டு ஆள் பிணைகளில் அவ்விளைஞனை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

அத்துடன், எதிர்வரும் ஜூன் 18ஆம் திகதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக யாழ்.நீதிமன்ற நீதிவான் மா.கணேசராசா உத்தரவிட்டுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .