2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

பஸ்ஸில் பாடசாலை மாணவி மீது பாலியல் சேஷ்டை புரிந்தவர் கைது

Menaka Mookandi   / 2012 மே 29 , மு.ப. 11:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சீ.எம்.ரிஃபாத்)

பஸ்ஸில் பயணித்துக்கொண்டிருந்த 15 வயதான பாடசாலை மாணவி மீது பாலியல் சேஷ்டை புரிந்த ஒருவரை சக பயணிகள் பிடித்து கண்டி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

ஹங்குராங்கெத்தயில் இருந்து கண்டி நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்றிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சந்தேகநபர் ஹங்குரங்கெத்த இலுக்கொல்ல பகுதியைச் சேர்ந்தவர் என்று விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

26 வதான இவர் திருமாணமானவர் என்றும் கண்டி நகரில் தனியார் வர்த்தக நிலையமொன்றில் தொழில்புரிந்து வருவதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர். சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்செய்வதற்கான நடவடிக்கைகளை கண்டி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .