2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

இரவில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய நால்வர் கோப்பாயில் கைது

Menaka Mookandi   / 2012 மே 29 , பி.ப. 01:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

யாழ். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தங்களின் ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தக் கூடிய விதத்தில் எந்த ஆவணங்களையும் வைத்திருக்காமையினாலும் இரவு வேளையில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய நான்கு பேர் நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் இன்றைய தினம் யாழ். நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட வேளை இவர்கள் யாழில் நடைபெறும் கொள்ளைச் சந்தேக நபர்களாக இருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாக கோப்பாய் பொலிஸார் மன்றில் தெரிவித்தனர்.

இதனை அடுத்து சந்தேகத்திற்கிடாக முறையில் நடமாடிய நான்கு பேரையும் எதிர்வரும் ஜூன் மாதம் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைத்து விசாரணையை மேற்கொள்ளுமாறு யாழ்.நீதிமன்ற நீதிவான் மா.கணேசராசா உத்தரவிட்டுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .