2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

அரியாலையில் தங்கநகைகளை கொள்ளையிட்ட இருவர் கைது

Suganthini Ratnam   / 2012 மே 30 , மு.ப. 08:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

யாழ்ப்பாணம், அரியாலை பூம்புகார் பகுதியில் வீடொன்றில்  அத்துமீறி நுழைந்து தங்கநகைகளைக் கொள்ளையிட்டதாகத் தெரிவிக்கப்படும் இருவர் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு யாழ். பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த வீட்டினுள் அத்துமீறி நுழைந்து அங்குள்ளவர்களை சிறிய  கத்தியைக் காட்டி அச்சுறுத்தியதுடன், வீட்டிலிருந்த தங்கநகைகளையும் பெறுமதியான பொருட்களையும் இச்சந்தேக நபர்கள் கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஏற்கெனவே பல வீடுகளை உடைத்து கொள்ளையிட்ட நிலையில் பொலிஸாரினால் தேடப்பட்டு வந்த இச்சந்தேக நபர்களை  கைதுசெய்துள்ளதாகவும் கைதுசெய்யப்பட்டவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்படுவதாகவும் யாழ். பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 

இச்சந்தேக நபர்கள் யாழ். நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் யாழ்.பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

  Comments - 0

  • koneswaransaro Saturday, 02 June 2012 02:01 PM

    பொலிசாருக்குப் பாராட்டுகள். இத்தகைய சமூகக்கேடர்களுக்குக் கட்டாயம் தண்டனை வாங்கித்தர வேண்டும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .