2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

பம்பலப்பிட்டியில் ஆணின் சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2012 ஜூன் 01 , மு.ப. 03:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சுபுன் டயஸ்)

கொழும்பு, பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரிக்கு முன்பாகவுள்ள வீதியோரத்திலிருந்து ஆணொருவரின் சடலம் இன்று வெள்ளிக்கிழமை காலை  மீட்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு, கோட்டைக்கல்லாறைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை உதயகாந்தன் (வயது 37) என்பவரது சடலமே மீட்கப்பட்டுள்ளது.

நேற்றிரவு இனந்தெரியாத நபர்கள் இவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்த நிலையில் சடலத்தை அவ்விடத்தில் விட்டுச் சென்றிருக்கலாமென்று நம்பப்படுவதாக பொலிஸ் பேச்சாளரும் அத்தியட்சகருமான அஜித் ரோஹண –தமிழ்மிரருக்கு தெரிவித்தார்.

வெள்ளவத்தையிலுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிலையத்தில் இவர் பணிபுரிந்து வந்ததாக விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளதாகவும் அவர் கூறினார். 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .