2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

சி.ஐ.டி. எனக்கூறி நோயாளியிடம் பணம் திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது

Suganthini Ratnam   / 2012 ஜூன் 04 , மு.ப. 09:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

பொலிஸ் குற்றப்புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவர் எனக் கூறி யாழ். போதனா வைத்தியசாலையின் 24ஆம் வார்ட்டில் இருந்த நோயாளியிடம் 4,000 ரூபாவைத் திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் இன்று திங்கட்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தன்னை பொலிஸ் குற்றப்புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவர் எனக் கூறிக் கொண்டு யாழ். போதனா வைத்தியசாலையில் நோயாளரைப் பார்ப்பதற்காக சென்ற இவர், நோயாளியிடமிருந்த பணத்தை திருடிக்கொண்டு தப்பிக்க முயற்சித்தபோது யாழ். போதனா வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகத்தர்களினால் சுற்றிவளைத்து பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இவர் பல திருட்டுச் சம்பவங்களில் தொடர்புடையவர் எனவும் இவரைக் கைதுசெய்வதற்கு தாங்கள் தேடிவந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள பொலிஸார், நாளை செவ்வாய்க்கிழமை யாழ். நீதிவான் நீதிமன்றத்தில் இவரை ஆஜர்படுத்தவுள்ளதாகவும் கூறினர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .