2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

யாழில் பூட்டப்பட்ட கடையிலிருந்து கைத்துப்பாக்கி, கைக்குண்டு மீட்பு

Kogilavani   / 2012 ஜூன் 05 , மு.ப. 08:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

யாழ்.சிறைச்சாலைக்கு அண்மையிலுள்ள பூட்டப்பட்ட கடை ஒன்றின் கூரையிலிருந்து கைத்துப்பாக்கி மற்றும் கைக்குண்டு ஒன்றை இன்று செவ்வாய்கிழமை மீட்டுள்ளதாக யாழ்.பொலிஸ் நிலைய  உப பொலிஸ் பரிசோதகர் எஸ்.விக்கிரமாராட்சி தெரிவிததார்.

யாழ். பிராதன வீதியில் உள்ள கடை ஒன்றிலிருந்தே கைத்துப்பாக்கியும் கைக் குண்டும் மீட்கப்பட்டுள்ளது.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலை தொடர்ந்து மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது இவை மீட்கப்பட்டுள்ளன.

இவ்விடயம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் நாளை புதன்கிழமை யாழ்.நீதிவான் நீதிமன்றில் மீட்கப்பட்ட கைத்துப்பாக்கி மற்றும் கைக்குண்டு தொடர்பில் அறிக்கை சமர்பிக்கவுள்ளதாக யாழ்.பொலிஸ் நிலைய  உப பொலிஸ் பரிசோதகர் எஸ். விக்கிரமாராட்சி மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .