2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

கஞ்சா போதை பொருளுடன் இருவர் கைது

Kogilavani   / 2012 ஜூன் 05 , மு.ப. 08:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


                                                                   (எம்.சி.அன்சார், ஏ.ஜே.எம்.ஹனீபா)

சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நிந்தவூர் பிரதேச வீடொன்றில் ஒரு கிலோ 500கிறாம் கஞ்சா போதைபொருளுடன், இரண்டு சந்தேக நபர்களை இன்று செவ்வாய்க்கிழமை காலை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்யதனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலினையடுத்து பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஜயந்த தஹநக்கா தலைமையிலான குழுவினர் குறித்த வீட்டினை சோதனை செய்தபோது விற்பனைக்கு தயாராகவிருந்த கஞ்சாவினை கைப்பற்றியதுடன் சந்தேக நபர்களையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை சம்மாந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .