2025 ஜூலை 25, வெள்ளிக்கிழமை

நாரம்மலைப் பகுதியில் கொள்ளையில் ஈடுபட்ட குழுவினர் கைது

Suganthini Ratnam   / 2012 ஜூன் 05 , மு.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

(மொஹொமட் ஆஸிக்)

குருநாகலை நாரம்மலைப் பகுதியில் கொள்ளையில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படும் குழுவொன்றை வரகாபொல பொலிஸார்  இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 1.45 மணியளவில் கைதுசெய்துள்ளனர்.

சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த வாகனமொன்றை சோதனையிட்டபோதே இவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

இச்சந்தேக நபர்கள் நாரம்மலைப் பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து 190,000 ரூபா பணத்தையும் 245,000 ரூபா பெறுமதியான தங்கநகைகளையும் கொள்ளையிட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

கொள்ளையிடப்பட்ட பணத்தில் கொள்வனவு செய்யப்பட்ட கையடக்கத் தொலைபேசியொன்றையும் சுமார் 89,000 ரூபா பணத்தையும்  சில தங்கநகைகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X