2025 ஜூலை 25, வெள்ளிக்கிழமை

இரு குழுக்களுக்கடையில் மோதல்; இருவர் படுகாயம்; ஏழு பேர் கைது

Menaka Mookandi   / 2012 ஜூன் 05 , மு.ப. 11:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

யாழ். மடம் வீதியில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் இருவர் வாள்வெட்டுக்கு இலக்கான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த மோதல் சம்பவம் இன்று செவ்வாய்கிழமை 1 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மோதலில் ஈடுபட்டவர்கள் மது போதையில் இருந்துள்ளனர் என்று விசாரணைகளின் மூலம் தெரியவந்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இந்த வாள் வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய ஏழு பேர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு யாழ்.பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக யாழ்.பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X