2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

மானிப்பாய் வீடொன்றிலிருந்து ஒருதொகை துப்பாக்கி ரவைகள் கண்டுபிடிப்பு

Menaka Mookandi   / 2012 ஜூலை 23 , மு.ப. 10:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜெ.டானியல், ரஜனி)

யாழ்ப்பாணம், மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்ட வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒருதொகை ரி - 56 ரக துப்பாக்கி ரவைகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

தங்களுக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து அப்பகுதியில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மேற்படி துப்பாக்கி ரவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் இது வரையாரும் கைது செய்யப்படவில்லை. இது தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .