2025 ஜூலை 21, திங்கட்கிழமை

போதைப்பொருளுக்கு மாற்றீடாகப் பயன்படுத்தப்படும் மாத்திரைகளை வைத்திருந்தவர் கைது

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 12 , மு.ப. 08:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே. என்.முனாஷா

போதைப்பொருளுக்கு மாற்றீடாகப் பயன்படுத்தப்படுகின்ற ஒரு இலட்சம் வரையான மாத்திரைகளை வைத்திருந்ததாகக் கூறப்படும் ஒருவரை பொலிஸார் இன்று செவ்வாய்க்கிழமை கைதுசெய்துள்ளதுடன், அம்மாத்திரைகளையும் கைப்பற்றியுள்ளனர். 

கைப்பற்றப்பட்ட இம்மாத்திரைகள் பிலியன்தலை பிரதேசத்திலிருந்து நீர்கொழும்புக்கு மோட்டார் சைக்கிளில்  கொண்டுவரப்பட்டுள்ளதாக  நீர்கொழும்பு பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.
 
நீர்கொழும்பு பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஆனந்த அல்விஸின் உத்தரவின் பேரில், பொலிஸ் பரிசோதகர் அரவிந்த தலைமையிலான குழுவினரே இம்மாத்திரைகளுடன் சந்தேக நபரைக் கைதுசெய்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .