2025 ஜூலை 21, திங்கட்கிழமை

பெண்ணிடம் தங்கச்சங்கிலி அபகரிப்பு

Kogilavani   / 2013 பெப்ரவரி 17 , மு.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-முறாசில்

மூதூர், சம்பூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டைபறிச்சான் பகுதியில் பெண்ணொருவரிடமிருந்து தங்கச் சங்கிலியை அபகரித்துச் சென்ற சம்பவமொன்று நேற்று சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

கட்டைபறிச்சான் பகுதியில் வர்த்தக நிலையமொன்றின் உரிமையாளரான குறித்த பெண்ணிடம் பொருட்களை விலைகேட்பது போல் நடித்த இருவர் அவர் அணிந்திருந்த தங்கச்சங்கிலியை அபகரித்துக் கொண்டு ஓடியுள்ளனர்.
இச்சங்கிலியை அறுத்துக் கொண்டு சென்றவர் விட்டுச் சென்றதாகக் கூறப்படும் படைதரப்பைச் சேர்ந்த ஒருவரின் அடையாள அட்டையுடன்

சம்பூர் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இச்சமப்வம் தொடர்பில் சம்பூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .