2025 ஜூலை 21, திங்கட்கிழமை

வவுனியாவில் குடும்பஸ்தர் கொலை

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 17 , மு.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம்

வவுனியா, நெடுங்கேணி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மாறாஇலுப்பை பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் இனந்தெரியாத நபர்களினால் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

மாறாஇலுப்பை, மகிழமோட்டையை சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான ஆறுமுகசாமி பிரேமசீலன் (வயது 38) என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக நெடுங்கேணி பொலிஸார் தெரிவித்தனர். 

கொலை செய்யப்பட்டவரின் கையடக்கத் தொலைபேசிக்கு 'உன்னை கொலை செய்வோமெனக்' கூறி நேற்று சனிக்கிழமை இரவு 9 மணியளவில் அழைப்பொன்று வந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து இந்நபர் வீட்டிற்கு அருகிலுள்ள இராணுவ பொலிஸ் காவலரணுக்கு  தனது மனைவியுடன் சென்று முறையிட்டுள்ளார். இது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யுமாறு இராணுவ பொலிஸ் காவலரணில் இருந்தவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். 

தொடர்ந்து இருவரும் நெடுங்கேணி பொலிஸில் முறைப்பாடு செய்ததாக உறவினர்கள் தெரிவித்தனர்.

எனினும் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இவரது  வீட்டிற்கு வந்த இனந்தெரியாதோர் இவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளனர். இதனைக் கண்டு  கூக்குரலிட்ட அவரது மனைவியின் வாயினுள் சீலையை திணித்துள்ளனர்.  பின்னர் அவரது சடலத்தை வீட்டிலுள்ள கிணற்றுக்கு அருகில் கொண்டு சென்று போட்டு விட்டு தப்பிச்சென்றுள்ளதாக உறவினர்கள் கூறினர்.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக நெடுங்கேணி பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .