2025 ஜூலை 21, திங்கட்கிழமை

தங்கநகைகளை கொள்ளையிட்ட இருவர் கைது

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 22 , மு.ப. 10:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

கட்டுகஸ்தோட்டையில் வீடு ஒன்றை உடைத்து பணம் மற்றும் தங்கநகைகளை கொள்ளையிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபர்கள் இருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

அத்துடன் கொள்ளையடிக்கப்பட்டதாகக் கூறப்படும் பணம், ஒருதொகுதி தங்கநகைகள் மற்றும் இவர்கள் பயன்படுத்திய வான் ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கட்டுகஸ்தோட்டை ரனவன வீதியில் உள்ள வீடு ஒன்றை உடைத்து ஐம்பத்தி இரண்டு இலட்சத்து ஐந்தாயிரம் ரூபா பெறுமதியான தங்கநகைகளையும் பணத்தையும் இவர்கள் நேற்று வியாழக்கிழமை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாகவம்  கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் பொலிஸார் விசாரணையை மேற்கொண்டுவருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .