2025 ஜூலை 21, திங்கட்கிழமை

கழுத்து வெட்டப்பட்ட ஒருவர் மரணம்

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 25 , மு.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரி.லோஹித்

மட்டக்களப்பு மாவட்டத்தில் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் ஒருவர் மரணமடைந்துள்ளார்.

வவுணதீவு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புதுநகர் பகுதியைச் சேர்ந்த வி.உதயராஜ் (வயது 42) என்பவரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.

மட்டக்களப்பு, வவுணதீவு பிரதேசத்திலேயே நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கழுத்து வெட்டப்பட்ட மேற்படி நபர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளதாக வவுணதீவு   பொலிஸார் தெரிவித்தனர்

இது தொடர்பான விசாரணையை வவுணதீவு பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .