2025 ஜூலை 21, திங்கட்கிழமை

புலிகளின் ஆதரவாளர்கள் இருவர் துப்பாக்கிச் சூட்டில் பலி

Kanagaraj   / 2013 பெப்ரவரி 26 , மு.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

புலிகளின் ஆதரவாளர்கள் இருவர் இராணுவத்தினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வாழைச்சேனை, புனாணை பிரதேசத்தில் வைத்து காரொன்றை கடத்திச்செல்வதற்கு முயன்றவேளையில் பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்தில் படுகாயமடைந்து இவ்விருவரும் தப்பிச்சென்று விட்டனர்.

இதனையடுத்து திம்புலாகல மலையில் இராணுவத்தினர் தேடுதல் நடத்தியதுடன் தப்பியோடுவதற்கு முயன்ற இருவர் மீதும் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளர்.

அந்த துப்பாக்கி பிரயோகத்திலேயே இருவரும் சற்று முன்னர் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவர்கள் இருவரும் கொள்ளை கோஷ்டியின் உறுப்பினர்கள் என்றும் நகைகள் மற்றும்  பணங்களை கொள்ளையடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அவ்விருவரும்  வெளிநாட்டுக்கு செல்வதற்காகவே காரை கடத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சுற்றிவளைப்பு தேடுதலில் நூற்றுக்கணக்கான இராணுவத்தினரும் பொலிஸாரும் ஈடுபடுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

முன்னாள் புலி உறுப்பினர் மீது துப்பாக்கி சூடு


ஆயுதமுனையில் கார் கடத்தல்


  Comments - 0

  • Zoon Tuesday, 26 February 2013 05:16 PM

    வெளிநாட்டுக்கு எப்படி கார்ல செல்வது?

    Reply : 0       0

    MADURANKULIKURANKAAR Thursday, 28 February 2013 01:56 PM

    ஒரு வேளை கடத்திய காரில் தலை மன்னார் சென்று அங்கிருந்து கடல் வளியாக இந்தியாவுக்கு காரில் செல்லலாம் என்று நினைத்து இருபார்களோ....

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .