2025 ஜூலை 21, திங்கட்கிழமை

கத்திக் குத்தில் ஒருவர் பலி

Suganthini Ratnam   / 2013 மார்ச் 01 , மு.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.மும்தாஜ்

மதுபோதையிலிருந்த நண்பர்கள் இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதில் இடம்பெற்ற கத்திக் குத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, கத்திக் குத்தை மேற்கொண்டதாகக் கூறப்படும் மற்றைய நபரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

வென்னப்புவ, கொஸ்வத்தை பிரதேசத்திலேயே நேற்று வியாழக்கிழமை இரவு  இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

லுணுவில கிழக்கு கிரிமெடடியான பிரதேசத்தைச் சேர்ந்த ஹெட்டி ஆராச்சிகே பத்மசிறி (வயது 42) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்;.

உயிரிழந்தவரும் அவருடைய நண்பரும் மதுபானம் அருந்திவிட்டு உரையாடியவாறே சைக்கிளில் வந்துகொண்டிருந்தபோது, அந்த உரையாடல் வாய்த்தர்க்கமாக மாறி  பின்னர் இவர்கள் இருவருக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையிலேயே கத்திக் குத்து இடம்பெற்றுள்ளதாக கொஸ்வத்தை பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார்,  கத்திக் குத்துக்கு இலக்கானவரை உடனடியாக தங்கொட்டுவை வைத்தியசாலைக்கு கொண்டுசென்றபோதிலும், அவர் உயிரிழந்திருந்தாகவும் பொலிஸார் கூறினர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக தங்கொட்டுவை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணையை கொஸ்வத்தை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .